Sunday, October 2, 2011

sivaji

சிவாஜி பிறந்த நாள்: சீமான் மலரஞ்சலி
சனி, 1 அக்டோபர் 2011( 18:46 IST )


உலகத் திரைப்பட வரலாற்றில் நடிப்புக் கலையில் முத்திரை பதித்த பெருந்தமிழர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 83வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட ஏராளமான இரசிகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை சிவாஜியின் மகன்கள் இராம்குமார், பிரபு ஆகியோரும், சிவாஜி இரசிகர் மன்றத்தினரும், இரசிகர்களும் மாலை அணிவித்தனர். சிவாஜி சமூக நல அமைப்புப் பேரவையின் தலைவர் சந்திரசேகர் மாலை அணிவித்தார்.

காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்தார். சீமானுடன் பிரபல வழக்குரைஞர் சந்திரசேகர், தமிழன் முழக்கம் சாகுல் அமீது, தமிழன் தொலைக்காட்சித் தலைவர் கலைக்கோட்டுத் தயம், ஊடகவியலாளர் அய்யநாதன், அன்புத் தென்னரசன், ஆவல் கணேசன், தங்கராசு உள்ளிட்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment